கைதாகியிருந்த தனது அணு விஞ்ஞானிக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றம்!

iran scientistதெஹ்ரான்: கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கைது செய்து சிறை வைக்கப்பட்டிருந்த ஈரான் அணு விஞ்ஞானிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது.ஈரானின் அணு திட்டங்கள் பற்றி ஆழமாக அறிந்திருந்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்ற ஷாக்ராம் அமிரி என்பவர், 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஈரான் திரும்பியபோது, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சவுதி முகர்வர்களால் கடத்தப்பட்டதாக தெரிவித்த அமிரி, தஞ்சக் கோரிக்கை பெறுவதற்காக முக்கிய ரகசிய தகவல்களை வெளிப்படுத்துவதற்காக தீவிர உளவியல் அழுத்த்த்திற்க்கு உள்ளாக்கப்பட்டதாக கூறினார். அவருடைய குற்றச்சாட்டை மறுத்த அப்போதைய அமெரிக்க அதிகாரிகள், அமிரியின் விருப்பமுடனே திருப்பி அனுப்ப்ப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

iran scientist
ஷாக்ராம் அமிரி , 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஈரான் திரும்பியபோது, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

Published by

Leave a comment