துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் விபத்தின் காரணமாக அவசரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அடர்த்தியான, கரும் புகை வந்து கொண்டிருந்ததை அங்கிருந்தோர் பார்க்க முடிந்தது. இப்புகை விமானத்தின் வயிற்றுப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. விமானத்தின் இறங்கமைப்பைக் (முன்சக்கரம்) காண முடியவில்லை.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக விமானத்தில் வெளியேற்றப்பட்டதாக துபாய் அரசு ஊடக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அவசர தரையிறக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் என்ன காரணத்தால் நடந்தது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வந்த விமானம் இது என்று கூறப்படுகிறது.

Leave a comment