இமாமின் கருத்தால் சர்ச்சை

imamகார்டிஃப்: பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என பிரித்தானியவை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் கூறிய ஓடியோ வெளியாகியுள்ளது. இமாம் அலி ஹம்முதா என்பவர் பிரித்தானியாவில் கார்டிஃப் பள்ளிவாயலில் இமாமாக இருக்கிறார்.

பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதை இஸ்லாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என மாணவர்களுக்குக் கூறியுள்ளார் .இவர் பேசியது, நிருபர் ஒருவரால் ரகசியமாக ஓடியோ வடிவில் பதிவுசெய்யப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது, பலஸ்தீனத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

imam

பாலியல் அடிமைகள் என்பது பிரித்தானியாவில் சட்டவிரோதமான ஒன்று, அதுமட்டுமின்றி பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி , பாலியல் அடிமை என்பது இஸ்லாமில் அனுமதிக்கப்படாத ஒன்று ஆகும். இவ்விடயம் அங்கு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

uk imam

Published by

Leave a comment