கூட்டு எதிர்கட்சியின் பாத யாத்திரை நல்லாட்சி அரசை தோற்கடிக்கும் முதல் முயற்சி: மகிந்த ராஜபக்ஷ

mahindaகிரிபத்கொட: ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிக்கும் முதல் கட்ட முயற்சியாக கூட்டு எதிர்கட்சியின் அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையை இன்று ஐந்தாவது நாளாக கிரிபத்கொட நகரில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

பாதயாத்திரையில் ஒன்று சேர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை கண்டு அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக கூறிய அவர், அரசாங்கம் மீது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சேரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதயாத்திரை இன்று மாலை கொழும்பிற்கு வந்து சேர்ந்த பின்னர் எதிர்ப்பு கூட்டமொன்று நடத்தப்படுமென்று தெரிவித்துள்ள போதிலும், அது நடத்தப்படவுள்ள இடம் குறித்து இது வரை அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து கேட்டபோது, கருத்துக்களை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த கூட்டம் நடைபெறவுள்ள தினம் இறுதி நேரத்தில் அறிவிக்கப்படுமென்று தெரிவித்தார்.

Published by

Leave a comment