பாகிஸ்தானுக்கு கைமாரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்

Book-Travel-on-SriLankan-Airlines[1]கொழும்பு: பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரக விமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் நேற்று (29) கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Book-Travel-on-SriLankan-Airlines[1]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment