கொழும்பு: ஒரு சிறுமியை இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக எழுந்துள்ள சந்தகேத்தின் பேரில் இலங்கையில் காவல் துறையினர் ஒரு பெண் உட்பட 12 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஓர் அறையை வாடகைக்கு எடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 12 நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒரு பௌத்த பிக்கு பௌத்த கோயிலில் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் தேடி வருவதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் 10ம் தேதியன்று இந்த குழந்தை குறைந்தது 9 பேரால் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இரவு கூட்டுபாலியல் வன்புணர்வுக்கு ஆளானாள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமியை சந்தேக நபர்கள் தெருவில் போட்டுவிட்ட நிலையில், அவர் அடுத்த நாள் காலை பௌத்த கோவிலுக்கு சென்றபோது, அந்த பிக்குவும் அவளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அந்தச் சிறுமி போலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
Published by
![child-abuse2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/child-abuse21.png?w=150&h=111)
Leave a comment