கொழும்பு: இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு 10 நாட்கள் பயிற்சி கொடுக்க முரளிதரன் ஒப்புதல் தெரிவித்திருந்ததையடுத்து, முரளிக்கும் இலங்கை கிரிக்கட் சபைக்குமிடையில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபலா கூறுகையில், நாங்கள் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளோம். முரளிதரனை காப்பாற்றுவதற்காக வாரியம் நிறைய செலவு செய்துள்ளது. அவரை நாங்கள் மூன்று முறை காப்பாற்றியுள்ளோம். இதற்கு நிறைய வாரியம் செலவு செய்துள்ளது. தொழில்பூர்வமாக அவர் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி ஒன்றுமில்லை, ஆனால் விஷயம் அறம் சம்பந்தப்பட்டதாகும் என்கிறார்.
இலங்கை மக்கள் எனக்காக நிறைய செய்துள்ளனர், நானும் அவர்களுக்கு முடிந்ததைச் செய்துள்ளதாகவே கருதுகிறேன். நான் என் நண்பரின் உதவியுடன் குட்னெஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளோம்.ykk
சுனாமிக்குப் பிறகு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30-40 பிட்ச்களை அமைத்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்ததை விட நாங்கள் எங்கள் நிதியிலிருந்து அதிகமாகவே செய்துள்ளோம்.
நம் வீரர்கள் அருமையான கோச்சாக முதிர்ச்சி பெற்றிருக்கும் போது வாரியம் அவர்களை துரத்தி அடித்துள்ளது. ஹதுரசிங்க, சமிந்தா வாஸ், மாவன் அட்டப்பட்டு, மரியோ வில்லவராயன், திலன் சமரவீர ஆகியோர் பயிற்சியாளர்களாகி விட்டனர். சமரவீர அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். இவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்இ
நான் துரோகியா இல்லை அவர்கள் துரோகியா? சம்பளமும் கூட அயல்நாட்டு பயிற்சியாளர்களுக்கு அதிகம் வழங்குகின்றனர். நம்மூர் பயிற்சியாளர்களுக்கு குறைவாக வழங்குகின்றனர். இவ்வாறு கொந்தளித்து பேசியிருக்கிறார் முரளிதரன்.
Leave a comment