பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் கருமுட்டையின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால் அதனால் ஓவுலேசன் பாதிக்கப்பட்டு அதனால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. எனவே தினமும் சிறிது பீன்ஸ் அல்லது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வாருங்கள்.
விட்டமின் பி6 குறைபாட்டின் காரணமாகவும் கருமுட்டையின் தரம் மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி நடைபெறும். எனவே தினமும் 2 வாழைப்பழத்தை உட்கொண்டு உடலில் விட்டமின் பி6 சத்தை சீரான அளவில் பெறுங்கள். இந்த விட்டமின் கருப்பையகத்தை வலிமைப்படுத்தி கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
கருமுட்டையின் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன்கள் மிகவும் முக்கியமானது. கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் முட்டையை உட்கொண்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் முட்டையில் விட்டமின் டி சத்தும் இருப்பதால் இது மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ளும்.
மீன்களில் சல்மன், டூனா, கானாங்கெளுத்தி போன்றவற்றை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் உட்கொண்டு வர ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் மீனில் கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் உள்ளது. மேலும் முட்டையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இன்றை பெண்களைத் தாக்கும் பிசிஓஎஸ் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

பெண்கள் போதிய அளவு விட்டமின் டியை பெற வேண்டியது அவசியம். ஏனெனில் விட்டமின் டி தான் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் கருத்தரிக்க சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண்கள் விட்டமின் டி நிறைந்த அவகேடோ பழத்தை உணவில் சேர்த்து வர, கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எள்ளில் உள்ள ஜிங்க் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கருமுட்டைக்கு காரணமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவும். மேலும் எள் விதையில் உள்ள அதிகப்படியான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் முட்டையின் உற்பத்திக்கு முக்கியமானது. எனவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் எள்ளை அதிகம் உட்கொள்வது நல்லது. பச்சைக் கீரை வகைகளையும் சேரத்துக்கொள்வது சாலச் சிறந்தது.
Leave a comment