வரலாற்றிலேயே முதன்முறையாக குவைத்தில் புதிய சாதனை படைத்த வெப்பநிலை!

  • SHM

sunகுவைத்: உலக வரலாற்றிலேயே முதல் முறையாக குவைத்தில் அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்த வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் இவ்வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதேதினம் அண்டை நாடான ஈராக்கிலும் வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. . ஈராக்கின் பஸ்ரா நகரில் கடந்த வியாழக்கிழமை வெயிலின் அளவு 53.9 டிகிரி செல்சியஸாக இருந்தது.

முன்னதாக கடந்த 1913ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வெயிலின் அளவு 56.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஆனால் அந்த பதிவில் ஏதோ கோளாறு என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment