சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை தொடர்பை இழந்தது. விமனம் 11:30 மணியளவில் அந்தமானை சென்று அடைந்து இருக்கவேண்டும், ஆனால் விமானம் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
சென்னை – அந்தமான் இடையில் வங்க கடலில் விமானத்தை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்து உள்ளது. காணாமல் போன விமானம் குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் விமானத்தை தேடும் பணி கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது.
Leave a comment