தான் பிடித்த முயலுக்கு 3 கால் என வாதிடும் உலமாக்களும், அவர்களின் வால்களும், தங்களது கருத்துக்களை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முன்வருவதில்லை.
“தான் கக்கூசுக்குப் போகிறேன்” என ஒருவர் ஸ்டேடஸ் போட்டால் கண்களை மூடிக்கொண்டு லைக்ஸ் விடும் 50 பேராவது ஒரு அறிவிலிக்கு இருக்கத்தான் செய்கின்றனர்.
“நான் 304 விளையாடுகிறேன்” என்று ஸ்டேடஸ் போட்டால், 70 லைக்ஸ் விழுகுது.
“நான் படம் பார்க்கிறேன்” என்று போட்டால், குறைந்தது 100 லைக்காவது விழுகுது.
“ஐரோப்பாவில் இருந்து உழைக்கும் பணம் ஹராம்” என ஒரு உலமா கூறி இருக்கு. அதுக்கும் லைக்ஸ்;.
அப்போ, இலங்கை அரசாங்கத் தொழில்புரிவோரின் பணம் மட்டும் என்ன ஹலாலா….?
“கலால் வரி” மூலம் பெறப்படும் அதிக வருமானமும் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் பங்கு வகிக்கிறது.
ஒருவரின் மானத்தையும், மரியாதையையும், குடும்ப மானத்தையும் சிதைத்து நாசமாகிச் சீரழிய உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் காத்தான்குடி மானம் மட்டும் உயரப் பறந்துகொண்டிருக்கிறது.
எனவே, அறிவிலிகளாக இருப்போர் முகநூலில் இருந்து ஒதிங்கிக் கொள்வதும், தங்களது குழந்தைகளைப் படிப்பித்து, தாங்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறவேண்டும் என கேட்கின்றேன்.
Leave a comment