கொழும்பு: கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (18) கொழும் கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். இந்தியாவின் கிறிஸ் நிறுவனத்தினால் ரக்பி விளையாட்டின் அபிவிருத்தி தொடர்பில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ரூபா 7 கோடி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜூலை 11 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ரூபா 50 ஆயிரம் பணம் மற்றும் ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதேவேளை இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நாமல் ராஜபக்ஷவின் பெயரிலுள்ள 4 வங்கிக் கணக்குகளை பரீட்சிப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ இன்று (18) மீண்டும் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவி நெகும (வாழ்வு எழுச்சி) திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று (18) காலை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment