லோர்ட்ஸில் விளாசிய சதத்தை வித்தியாசமாக கொண்டாடிய மிஸ்பா எதற்காக தெரியுமா??

misbahul haqலண்டன்: இங்கிலாந்து மண்ணில் அதிக வயதில் சதம் விளாசிய அணித் தலைவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் பெற்றுள்ளார். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 42 வயதான பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் சதத்தைப் பெற்றார்.

இந்த சதம் மூலம் கடந்த 82 ஆண்டுகளில் அதிக வயதில் டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

misbahul haq

அவர் இந்த சதம் விளாசிய போது அந்த சதத்தை வித்தியாசமாக கொண்டாடி அனைவரையும் ரசிக்க வைத்தார். அவர் சதம் அடித்த போது மைதானத்தில் 10 push-ups எடுத்தார். இது தொடர்பாக கேட்ட போது, நான் இங்கிலாந்தில் சதம் அடித்தால் 10 push-ups எடுப்பேன் என்று அபோட்டாபாத் முகாமில் உள்ள இராணுவ வீரர்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். அதனாலே அவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நான் விளையாடும் போது எனது மனைவி எனக்காக நோன்பு இருந்தார். அவருக்கு இந்த சதத்தை சமர்பிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment