யார் அந்த லொறி ஓட்டுநர்?

franceபரிஸ்: பிரான்ஸின் நீஸ் நகரத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தேசிய தினத்தின் நிறைவு நாளை குறிக்கும் விதமாக நடைபெற்ற வாண வேடிக்கைகளை காணக் கூடியிருந்த கூட்டத்திற்குள் மிக வேகமாக, ஒரு லொறி புகுந்தது. லொறி ஓட்டுநரை பொலீஸ் சுட்டுக் கொல்வதற்கு முன், ஓட்டுநரும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். லொரிக்குள் துப்பாக்கிக்களும், கையெறி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை லொரியை ஓட்டி வந்தவர் விவரம் தெரியவில்லை. ஆனால், லொரிக்குள் இருந்த அடையாள அட்டைகளை வைத்து, அவர் 31 வயதுடைய துனீஷிய வம்சாவளியை சேர்ந்த பிரஞ்சுக்காரர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த ஓட்டுநர் நீஸ் பகுதியில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

france

ஓட்டுநர் இந்த லொரியை தனித்து இயக்கினாரா அல்லது அவருடன் வேறு கூட்டாளிகள் இருந்தனரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

நீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரத்தம் வழங்க நாடு முழுவதும் பிரஞ்சு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் பல குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காணாமல் போன தங்கள் சொந்தகளை உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Published by

Leave a comment