மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதியின் நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்சவே காரணம்!
மட்டக்களப்பு: பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களுமே காரணம் என ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் செயல்கள் தொடர்பில் கடும் ஆத்திரம் அடைந்த ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியால் அனுசரணை வழங்கப்பட்டு போஷிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களுக்கு சுதந்திரமாக செயற்பட நல்லாட்சி அரசாங்கம் அனுமதி அளித்து வருவதாக கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அம்பிட்டியே சுமனரத்தன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளாததாக கூறி மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கியதுடன் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் ஜனாதிபதியை திட்டித் தீர்த்திருந்தார்.
பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களுமே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
Leave a comment