மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

  • ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், அஹமட் எஸ்.முகைதீன்

danceமட்டக்களப்பு: புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்  (10) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெபர் மைதானம், நீச்சல் தடாகம் என்பவற்றை திறந்து வைத்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனார்ன்டோ, அமைச்சர் தயா கமகே, இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.ஐ.எம்.மன்சூர், ஸ்ரீநேசன், எம்.மஹ்ரூப் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

dance

இந்த வெபர் மைதானமானது விளையாட்டுத்துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

maithiri hizbullah weber

Published by

Leave a comment