மட்டக்களப்பு: 290 மில்லியன் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்றைய தினம் (10) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உள்ளுர் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.
1958ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையம், 1983ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தகிதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப்படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிவில் விமானப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன. கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளுர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமரியிடம் வலியுறுத்தி வந்ததற்கு அமைவாக இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Published by


Leave a comment