அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
பின்வரும் விடயங்களை கடைப்பிடித்து இன்ஷா அல்லாஹ நாளை 06.07.2016ம் திகதி ஈதுல் பித்ர் நோன்புப்
பெருநாளைக் கொண்டாடுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
1. இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் வரையறைகளையும் பேணி பெருநாள் தினத்தை அனுஷ்டிக்குமாறும்
2. ஆண் பெண் கலப்புக்கள் ஏற்படுவதையும், வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக்
கொள்ளுமாறும், கண்ணியத்திற்குரிய எமது சகோதரிகள் கண்டிப்பாக இஸ்லாமிய ஆடைகளை அணிந்து
வெளியில் செல்லுமாறும்3. பட்டாசு கொழுத்துதல் போன்ற வீண் விரயங்களை தவிர்ந்து கொள்ளுமாறும்
4. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதுடன் எமது
செயற்பாடுகள் அனைத்தையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றது.
5. பெருநாள் வாழ்த்தாக குல்லு ஆம் வஅன்ந்தும் பீ கைர் என்ற துஆவினை பரஸ்பரம் தெரிவித்து எமது
பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாறக்.
ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி.
Published by
![eid-mubarak-2012-eid-cards-eid-greeting-cards-wallpapers[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/eid-mubarak-2012-eid-cards-eid-greeting-cards-wallpapers11.jpg?w=150&h=89)
Leave a comment