கொழும்பு: மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலித தெவரப்பெரும, வைத்தியசாலையிலிருந்து வெளியாகி, சரணடைவதற்காக சென்றுள்ளார். உரிய ஆவணங்களுடன் இன்று பி.ப. 3.30 மணியளவில் மதுகம நீதிமன்றில் சரணடைய சென்றபோதிலும் நீதிமன்ற கடமைகள் நிறைவடைந்ததால் நீதிமன்றம் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை (06) அரசாங்க விடுமுறையாக அமையும்பட்சத்தில், நாளை மறுதினம் (07) வியாழக்கிழமை அவர் நீதிமன்றில் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மீகஹதென்ன ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கு மாணவர்கள் 10 பேரை பலாத்காரமாக சேர்த்தமை, அது தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரை தாக்கியமை, தற்கொலைக்கு முயற்சி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 10 மாணவர்களின் தாய்மார்கள் இன்று (05) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment