-
AK-99
லண்டன்: உலக நாடுகளின் பிறை மற்றும் தொழுகை நேரங்களைக் கணித்துவரும் லண்டன் மர்கஸின் அறிவித்தல்களுக்கமைய இதுவரை சூரியன் நேரத்தோடு மறையும் உலக நாடுகளில் ஷவ்வால் பிறை தென்படாததால் ரமழானை 30 தினங்களாகப் பூர்த்திசெய்து, புதன்கிழமை பெருநாள் என அந்நாடுகள் அறிவித்திருக்கின்றன.
அவ்வறிவித்தலின்படி, சவுதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் ஷவ்வால் பிறைக்காகக் காத்திருப்பதாகவும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஷவ்வால் பிறை தென்படாததால் புதன்கிழமை நோன்புப் பெருநாள் என அந்நாடுகள் அறிவித்திருக்கின்றன.
இன்னும் உலகின் பெரும்பாலான நாடுகள் மாலைப்பொழுதை அடையாத நிலையில் இம்முதற்கட்ட அறிவிப்பை தெரிவிக்கின்றோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
yourkattankudy

Leave a comment