கொழும்பு: கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 28ம் திகதி நடத்தவுள்ள நடைபேரணிக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்தே இவர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து இவர்கள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம். சந்திரசேன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment