-
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: கல்லடி பழைய பாலத்தில் சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மேற்படி சம்பவம் இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இளைஞன் தற்கொலை செய்த கல்லடி பழைய பாலத்தில் பெரும் திரளான இளைஞர்,யுவதிகள் ,பொது மக்கள் என பலரும் வந்த வண்ணமுள்ளனர்.
தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த கிஷோர் (வயது-19) என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment