- S. சஜீத்
ஆரையம்பதி: காத்தான்குடி பொலிஸ் பிரிவை அண்டிய ஆரையம்பதி பகுதியில் மர ஆலை உற்பட வீடு ஒன்றும் தீயில் எரிந்தது இச் சம்பவம் 30.06.2016 இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் குறிப்பிட்டனர். தீச்சம்பவம் நிகழ்ந்த போது வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் மர ஆலையில் வேலை பார்க்கும் நபர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் மேலும் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் மர ஆலையில் காணப்பட்ட பல தளபாட பொருட்கள் சேதமடைத்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னனெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a comment