கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் தனது சட்டத்தரணியிடம் சைகை முறையில் நடந்து கொண்டமையினால்,கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். வன்னியாராச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பவித்ரா வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் பல முறை இவ்வாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என்றும், நீதிமன்றத்தினுள் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் விடுப்பது தவறு என்றும் கொழும்பு மேலதிக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
நபர் ஒருவருக்கு வீடு வாங்கித் தருவதாக கூறி, ரூபா 2 மில்லியனை பெற்று மோசடி செய்த வழக்கு ஒன்றிற்காகவே பவித்ரா வன்னியாராச்சி நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment