கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில்களை வழங்காமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சோபித தேரரின் 74வது ஜனன தின வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பேசிக்கொள்ளவில்லை என்பது இதற்கு உதாரணம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Published by


Leave a comment