- எம்.எச்.எம் .அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் 24.06.2016 இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காத்தான்குடி அல்மனார் அறிவியியற்கல்லூரி முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மீடியா போரத்தின் பிரதித் தலைவர் எம் எப் எம் பஸால் ஜிப்ரி தலைமையில் இடம்பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக மௌலவி எம் ஏ எம் மசூத் அகமட் ஹாசிமி அவர்களால் மார்க்கச் சொற்பொழிவு இடம்பெற்றதுடன்
மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.வெதகெதர போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காத்தான்குடி மத்தியஸ்தர் சபைத்தலைவர் எம் ஜ எம் உசனார் மின்சார சபையின் அத்தியட்சகர் எம் எம் நௌபல் புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடிக்கான பொறுப்பதிகாரி எம் எம் றுஸ்வின் திவிநெகும முகாமையாளர் ஏ எல் ஸெட் பஹ்மி மற்றும் தமிழ் ஊடக சகோதரர்கள் கல்விமான்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment