ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன?

uk-flag-3[1]லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்? உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும். ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும்.

அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி?
லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது. அதன்படி, வெளியேறுவதற்கான முறையான அறிவிப்பை கொடுத்த நாளிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசமிருக்கிறது. அது எப்போது நடக்குமென தெரியவில்லை.

பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் புது ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். முதலாவது வர்த்தகம். ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய விதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டியும் வரலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கனவே வாழும் பிரிட்டிஷ் மக்களின் நிலைமை மற்றும் பிரிட்டனிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குடிகளின் நிலைமை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டும். ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் உருவானபின், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய சட்டங்கள் அனைத்தையும் பிரிட்டன் சட்டங்களாக புதுப்பிக்க வேண்டும்.

Published by

Leave a comment