பத்ர் யுத்தமும் அதன் படிப்பினைகளும்- சொற்பொழிவு

  • எம். எச்.எம். அன்வர்

muzammil DSகாத்தான்குடி: பத்ர் யுத்தமும் அதன் படிப்பினைகளும் எனும் தலைப்பில்  ரமழான் பிறை 17 அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பத்ர் யுத்தம் தொடர்பான சொற்பொழிவொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் உரையாற்றினார்.

இஸ்லாத்தில் முதல் யுத்தம் எனக்கருதப்படும் பத்ர் யுத்தம் பற்றியும் அதனை வெற்றிகொண்ட முஹம்மது நபியவர்களும் 313 ஸஹாபாக்கள் பற்றியும் அவர்களது வியூகம் எவ்வாறு காணப்பட்டது மற்றும் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் நகர்வுகள் என்ன என்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

muzammil DS

அத்துடன் தற்கால முஸ்லிம் உலகு வெளிநாட்டு ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதால் பாரிய விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றியும் எமது சமூகம் இது தொடர்பாக நன்கு சிந்தித்து நடக்கக் கடமைப்பட்டுள்ளதோடு, முஹம்மது நபியவர்கள் காட்டித்தந்த சன்மார்க்க வழியில் நடப்போமாயின் பல வெற்றிகளையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றவர்களாக மிளிர்வோம் என பிரதேச செயலாளர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

ds office

Published by

Leave a comment