கிளப் போட்டிகளில் ‘ஹீரோ’.. யூரோ தொடரில் ‘ஸீரோ’

ronaldoபரிஸ்: ஐரோப்பிய கால்பந்து தொடரில் சில நட்சத்திர வீரர்கள் ஒரு கோல் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2012ம் ஆண்டை விட இந்த தொடரில் கூடுதலாக 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும் கோல் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன. சிறிய அணிகள் கூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் விளையாடி வருகின்றன. அதே நேரம் நட்த்திர வீரர்களாக வலம் வருபவர்கள் தங்கள் அணிக்கு இன்னும் ஒரு கோல் கூட அடிக்காமல் உள்ளனர். இதில் போர்த்துக்கலின் ரொனால்டோ தான் பெரிதும் ஏமாற்றம் தந்தவராக இருக்கிறார்.

கடந்த 2 போட்டியில் ஒரு கோல் கூட இல்லை. ஒஸ்திரிய அணிக்கு எதிராக ‘பென்லாடி’  கூட அவரால் கோல் போட முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதேபோல் சுவீடன் வீரர் இப்ராகிமோவிச், 2 போட்டியில் ஒரு கோல் முயற்சியில் கூட ஈடுபடவில்லை. இவர்களது மோசமான செயல்பாட்டால் போர்த்துக்கல், சுவீடன் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு அந்தரத்தில் நிற்கிறது.

ronaldo

மேலும், இங்கிலாந்து நட்சத்திரம் வெய்ன் ரூனி, 3 போட்டி முடிந்து விட்ட போதும், இன்னும் ஒரு கோல் கூட போடவில்லை.

பேயர்ன் முனிக் கிளப் அணியின் அதிரடி ஜோடியாக முல்லர் (ஜேர்மனி), லெவண்டோவ்ஸ்கி (போலந்து) இருக்கின்றனர். இவர்கள் தங்களது அணி போட்டிகளில் ஜொலிக்காமல் போக ஆட்டம் ‘டிரோ’ ஆனது. உலக சாம்பியனான ஜேர்மனி அணிக்கு மரியா கோட்சாவும் சொதப்பி தள்ளுகிறார்.

இந்த ஒட்டுமொத்த நட்சத்திர வீரர்களும் இந்த சீசனில் தங்களது கிளப் அணிக்காக 203 கோல்களை அடித்துள்ளனர். ஆனால் ஐரோப்பிய தொடரில் ஒரு கோல் கூட அடிக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றமே.

Published by

Leave a comment