மக்கா: 1980 மற்றும் 1990களில் உலகம் முழுவதும் ஒலித்துவந்த ஓர் அழகிய கிராஅத்தை அக்காலத்திலுள்ளவர்கள் இன்றும் மறக்கமாட்டார்கள். ஒலி,ஒளி வடிவில் அப்போது உலகில் வெளிவந்தபோதிலும், குறிப்பாக இலங்கையில் ஒலி நாடாக்கள் மூலமாவே இக்கிறாஅத்தைக் கேட்டிருக்கின்றோம்.
1927ம் ஆண்டு ஹேர்மொன்திஸ், கெய்ரோவில் பிறந்த அப்துல் பாஸித் அவர்கள் 1980களில் பிரசித்திபெற்ற காரியாக விளங்கினார். அன்னார், உலகமெங்கிலும் அழைக்கப்பட்டு அவரது இனிமையான குரலோசையில் ஒலிக்கும் குர்ஆனைக் கேட்பதற்கு பல இலட்சம் மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
நோன்பு காலங்களில் இலங்கை முஸ்லிம் சேவைகளில் சஹர் நிகழ்ச்சியில் அப்துல் பாஸித் அவர்களின் கிராஅத்தை அதிகமாகக் கேட்க முடியும்.
உலகில் அப்போதிருந்த ஹாபிழ்கள் தங்களது குரல்களை அப்துல் பாஸித் அவர்களின் சுருதியில் ஓதுவதற்கு முயற்சித்து வந்தனர்.
எனினும், 1988ம் ஆண்டு அப்துல் பாஸித் அவர்களின் மறைவையடுத்து, 1990களின் பிற்பாடு, மஸ்ஜிதுல் ஹரமின் இமாம்களான சுதேஷ் மற்றும் சுரைம் ஆகியோரின் கிறாஅத்கள் பிரபல்யமடைந்தன.இன்றும்கூட இவர்களது கிறாஅத்திற்கு உலகெங்கிலும் ஓர் தனிவரவேற்பு இருப்பதுடன், அதிகமான இளம் ஹாபிழ்கள், இமாம் சுதேஷ், இமாம் சுரைம் ஆகியோரின் கிறாஅத் வடிவத்திலேயே குர்ஆனை ஓதிவருவது குறிப்பிடத்தக்கது.
Published by
![images[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/images1.jpg?w=150&h=108)
Leave a comment