இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாகிஸ்தான்

submarine– MJ

டெல்லி: இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பெட்டரியில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் தொடங்கின. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவை விட மிக அதிநவீனமான நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய கடற்படையிடம் இருப்பதில் ஐ.என்.எஸ். சக்ரா மட்டும்தான் அணுசக்தியில் இயங்கக் கூடியது. கடந்த ஆண்டுதான் 10ஆண்டுகால குத்தகைக்கு ரசியாவிடம் இருந்து வாங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சர்வதேச விதிகளின் படி இதில் ஆயுதங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை

தற்போது பிரெஞ்ச் நிறுவனத்தால் இந்தியாவில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானிடம் 47 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. தற்போது பிரெஞ்சு நிறுவனத்தால் இந்தியாவுக்காக கட்டமைக்கப்படும் நவீன நீர்மூழ்கிக் கப்பலைப் பெற்ற முதல் இந்திய பெருங்கடல் பிராந்திய நாடு கூட பாகிஸ்தான் என்பதாக இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

submarine

Published by

Leave a comment