17 சந்தேக நபர்களும் எச்சரிக்கப்பட்டு நேற்று விடுதலை பெபிலாயான தாக்குதல் சம்பவம்:

Fashion Bugபெபிலியான ‘பெஷன் பக்’ களஞ்சியசாலை மீதான தாக்குதல் தொடர்பில் கைதான 17 சந்தேக நபர்களையும் கடுமையாக எச்சரித்த நீதவான், பின்னர் அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பான விசாரணை நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் நடந்தது. இதன்போது 17 பேரையும் எச்சரித்த மஜிஸ்திரேட் அஜித் எம். மாசிங்ஹ அவர்களை விடுவித்தார். பிரச்சினையைத் தொடர்ந்தும் கொண்டு செல்லாமல் சமாதானமாக இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முறைப்பாட்டாளரான வர்த்தகர் இணக்கம் தெரிவித்த பின் சந்தேக நபர்கள் விடுதலையாகினர்.

விடுதலையானோருள் மூன்று பெளத்த பிக்குமாரும், ஒரு பாடசாலை மாணவரும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.அணிவகுப்பை நடத்துமாறு சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டபோது, இச்சம்பவத்தை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து முறைப்பாட்டை வாபஸ் பெற வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் உத்தீக் ஒமர்தீன் இணக்கம் தெரிவித்திருப்பதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா நீதிமன்றில் தெரிவித்தார். அதற்கு மற்றைய தரப்பினர் இணக்கம் தெரிவித்ததன் பின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை விடுவிக்க உத்தரவிட்ட மாஜிஸ்ரேட், மீண்டும் இவ்வாறான சம்பவத்தில் சம்பந்தப் பட்டால் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கடுமையாக எச்சரிக்கையும் செய்தார்.

-தினகரன்

Published by

Leave a comment