– பழுளுல்லாஹ் பர்ஹான்
நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹெல்பொட பிரதேசத்திலுள்ள இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் தொழில் பயிற்சி நிலையத்திற்கு 63 மில்லியன் ரூபா இந்திய நிதியுதவியுடன் பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்திய உயாஸ்தானிகர் அசோக் கே. காந்தா அவர்களின் தலைமையில் ஹெல்பொட தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இந் நிலையத்தில் அலுமினியம் பொருத்துனர், மோட்டார்வாகன இயந்திர தொழில்நுட்பவியலாளர், ஆகிய 02 தொழில் பயிற்சி பாடநெறிகளுக்கு வேண்டிய பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சிக்கும் இந்திய அரசுக்குமிடையில் 2011.07.11 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இப்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இவ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா அவர்கள் தொழில் பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்ட உபகரணங்களை பார்வையிடுவதையும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியை திறந்து வைப்பதையும் படத்தில் காணலாம்.



Leave a comment