மட்டு கல்லடி பழைய பாலத்திற்கு தற்காலிக பூட்டு

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????
BY: FM. Farhan

மட்டக்களப்பு: கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி பழைய பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மட்டு கல்லடி பழைய பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதாலும் அதன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுவதாலுமே இப்பழைய பாலம் மூடப்பட்டுள்ளது.

பழைய பாலத்தினுள் நுழைய வேண்டாம் எனும் விளம்பர பலகையும் போடப்பட்டுள்ளதுடன் பழைய பாலத்தின் புனரமைப்பு மற்றும் அதன் வீதி அபிவிருத்தி வேலைகள் முடிவடைந்தவுடன் பழைய பாலத்தினூடாக மோட்டர் சைக்கிள் மற்றும் முற்சக்கர வண்டி செல்வதற்கு அனுமதிக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரட்னம் தெரிவித்தார்.

ஏலவே கல்லடி புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டும் பழைய பாலத்தினூடாக வாகனங்கள் போக்குவரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment