கிழக்கு மாகாண அமைச்சர் JICA இணைப்பாளருடன் கலந்துரையாடல்

– பஹ்மியூஸூப்

???????????????????????????????திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டில் கீழ் மூவின மக்கள் வாழும் கிராமங்களை இனங்கண்டு அக்கிராமங்களை JICA  திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை நாட்டிற்கான JICA இணைப்பாளருடன் கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமான்லெப்பை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 03.04.2013ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது. அம்பாறை மாவட்டத்தின் நான்கு கிராமங்களும் மட்டக்களப்பில் மூன்று கிராமங்களும் திருகோணமலையில் மூன்று கிராமங்களுமாக பத்து கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

???????????????????????????????

கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சார் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், எம்.ஐ.ஹியாவூடீன், மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment