காலத்தின் தேவைகளில் ஒன்றாக காத்தான்குடியில் உதயமான முதலாவது பெண்களுக்கான பள்ளிவாயல்

???????????????????????????????-MJ

இலங்கையில் 100 வீதம் முஸ்லிம்கள் தனித்து வாழும் சிறப்புப் பெற்ற முஸ்லிம் நகரமாக விளங்கும் காத்தான்குடியில் சென்ற வாரம் 31-03-2013ல்  ‘மஸ்ஜிதுல் ஸெய்யிதா பத்ரிய்யா அகமட்’ எனும் பெண்களுக்கான ஓர் அழகிய பள்ளிவாயல் திறக்கப்பட்டது.

அமைச்சர் பசீர் சேகுவதாவூத், நகர சபை உறுப்பினர் ஸல்மா அமீர் ஹம்ஸா ஆகியோரின் அயராத முயற்சியில் இன்று காத்தான்குடியில் இப்பள்ளிவாயல் பெண்களுக்கான ஓர் சிறப்பைப் பெற்றிருக்கின்றது.

முஸ்லிம் பெண் பிரயாணிகளின் வசதிகருதியே இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டிருக்கின்றது. காத்தான்குடியிலிருந்து தன் குடும்பத்துடன் வெளியூர் சென்று வரும்போது இவ்வாறான பெண்களுக்கான தனிப்பட்ட பள்ளிவாயல் வசதிகள் எவ்வாறு எமது பெண்களுக்கு வசதியாகவும் பேருதவியாகவும் இருந்து வருகின்றன  என்பதை ஒவ்வொரு சகோதரர்களும் சிந்திக்கவேண்டும்.

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

இலங்கையில் ஓர் முன்மாதிரியான முஸ்லிம் நகரமாக திகழும் காத்தான்குடியில் பெண்களுக்கான வசதிகள் கொண்ட பள்ளிவாயல் ஒன்று அமைவது காலம் கடந்த ஓர் சேவையாக இருப்பினும், இன்றைய காலத்தின் அத்தியவசிய தேவைகளுள் ஒன்றாக இப் பள்ளிவாயல் தற்பொழுதாவது காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.

பிரயாணிகள், விருந்தினர்கள் விடயத்தில் உதவி, ஒத்தாசைகள் வழங்குவது பற்றி இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது. நிச்சயமாக பிரயாண நிமித்தம் எமது ஊருக்கு வரும்  சகோதரிகளுக்கு அவர்களுக்கான தொழுகை, ஓய்வு மற்றும் குழந்தைகளுக்கான தற்காலிக பராமரிப்புக்களுக்கும் இப்பள்ளிவாயல் வழி சமைக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

இப்பள்ளிவாயலை மேற்கொண்டு நல்லமுறையில் தொடர்ந்து பராமரித்து வருவதும், அதற்கான உதவிகளை மென்மேலும் வழங்குவதும் எமது சகோதரர்களுக்குரிய முக்கிய பொறுப்பாகவும் அமையும்.

காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அன்வர் மற்றும் மஸ்ஜிதுல் மர்யம் ஆகிய பள்ளிவாயல்களில் பெண்களுக்கான தொழுகை அமைப்புக்கள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment