காத்தான்குடி: எமது காத்தான்குடி மத்திய கல்லூரியானது அண்மைக் காலமாக சமூகத்தின் ஒத்துழைபபுடன் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கல்லூரியின் விளையாட்டுத்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் கல்லூரி மைதானததில் விளையாட்டுப பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற காத்தான்குடியின் பிரபல்யம்பெற்ற விளையாட்டு கழகங்களான சன்றைஸ், அல் ஹிக்மா, இலாஹிஸ், காத்தான்குடி விளையாட்டுக கழகம் என்பவற்றுடன் ஒன்றினைந்து “KCC Sports Academy” எனும் அமைப்பை ஆரம்பித்துள்ளது.
இவ் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் ULA. முபாரக அவர்களும் பிரதி அதிபர் SH. பிர்தௌஸ், விளையாட்டுப பொறுபபாசிரியர் MM. ஜஹ்பர் ஆசிரியர் உட்பட 04 விளையாட்டுக் கழகங்களின பிரதிநிதிகளும் கலந்து கொணடனர்.
இக் கூட்டத்தில் கடந்த வாரம் மைதானத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செயத 04 விளையாட்டுக் கழகங்களுக்கும் நன்றியைத தெரிவித்த அதிபர் கலலூரியின் விளையாட்டுத துறையை மேலும் அபிவிருத்தி செய்ய இவ் அமைப்பினூடாக அனைவரும் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் “KCC Sports Academy” ற்கான நிர்வாக சபை தெரிவு செய்யபபட்டது. இதன் தலைவராக கல்லூரியின் அதிபர் அவர்களும் செயலாளராக MM. ஜெனீஸர் (இலாஹிஸ் வி.க) அவர்களும் பொருலாளராக கல்லூரியின் சார்பாகவும் விளையாட்டுக் கழகஙகளின் சார்பாகவும் ஆசிரியர் MTM. ஷரீக் அவர்களும் தெரிவு செயயபபட்டனர்.
ஏனைய நிர்வாக உறுபபினர்களாக கலூரியின் நிர்வாகப பிரதி அதிபர் இணைப பாடவிதானதிற்கான பிரதி அதிபர், கலலூரியின் விளையாட்டுத துறைப பொறுபபாசிரியர், பழைய மாணவர் சங்கத்தின் சார்பாகவும் பாடசாலை அபிவிருததிச் சபை சார்பாகவுமாக ஒருவரும் ஒவ்வொரு கழகத்திலிருந்து தலா இருவர் வீதமும் தெரிவு செய்யப பட்டனர். மேலும் இக்கூட்டததில் கல்லூரியின் விளையாட்டுக் குழுக்களை தங்கள் அணிகள் மூலம் பயிற்சியளிதது போட்டிகளுக்கு அழைததுச் செல்லுதல் கல்லூரியின் சகல விளையாட்டுச் செயற்பாடுகளுக்கும் முழு ஒததுழைப்பு வழங்கல் மற்றும் எதிர்காலத்தில் மைதானத்தை முழுமையாக அபிவிருததி செயவதற்கான சகல நடவடிக்கைகளையும மேற்கொள்ளல் போன்ற தர்மானங்களும் நிறைவேற்றபபட்டன. இக்கூட்டததின் போது காதான்குடி விளையாட்டுக் கழகததினால் ரூபா 5000 பெறுமதியான மின்குமிழகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

Leave a comment