ஊடகங்களை நசுக்குவதற்கு எடுக்கப்படும் சம்பவங்கள் வண்மையாக கண்டனத்துக்குரியது- அமைச்சர் றிசாத் பதியுதீன்

RISHATH[1]–  இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: இந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் மக்கள் அன்றாட நடப்புக்களை அறிந்துகொள்ளும் முக்கிய சாதனமாக ஊடகங்கள் காணப்படுவதால் அதனை நசுக்குவதற்கு எடுக்கப்படும் சம்பவங்கள் வண்மையாக கண்டனத்துக்குரியது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகைகளில் உதயன் பத்திரிகை பழைமையானது.இப்பத்திரிகை யாழில் இருந்து வெளிவருகின்றது. ஊடகங்கள் மக்களுக்கு தேவையானவற்றை கொண்டு செல்லும் ஒன்றாகும். இதில் விமர்சனங்கள் வரலாம். ஒவ்வாத கருத்துக்கள் பிரசுரமாகலாம். அதற்காக  ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுமெனில் அது அனுமதிக்கப்பட முடியாததொன்று.

இந்த தாக்குதல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தோற்றுவிக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தசம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து பொலீஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

Published by

Leave a comment