இலங்கையில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற ஒரே ஒரு சர்வதேச பாடசாலையான (K.E.A.) சர்வதேச பாடசாலையின் 6வது கிளை இன்று மட்டக்களப்பில் உதயம்

???????????????????????????????
BY: FM. Farhan

-பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கையில் ஐ.எஸ்.ஓ. (I.S.O.) தரச் சான்றிதழ் பெற்ற ஒரே  ஒரு சர்வதேச பாடசாலையான  கே.ஈ.ஏ. (K.E.A.) சர்வதேச பாடசாலையின்  ஆறாவது கிளை இன்று புதன்கிழமை காலை மன்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள இலக்கம் 6, வைத்தியசாலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ். பாக்கியராசாவினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில்  கே.ஈ.ஏ  சர்வதேச பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.பி.சந்திர சிரி விஜயகுமார , கே.ஈ.ஏ  சர்வதேச பாடசாலையின அபிவிருத்திப் பணிப்பாளர் திருமதி. பஞ்சலிகா குலதுங்க, பிரமுகர்கள், கல்விமான்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலை இலங்கையில் கொழும்பு, கண்டி, குருநாகல், மூதூர், கிண்ணியா, ஆகிய 5 நகரங்களில் சர்வதேச பாடசாலை ரீதியில் ஓர சிறப்பான சேவையை செய்து வருவதோடு அதன் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் இன்று மட்டக்களப்பு நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment