அரசாங்கப் பாடசாலைகளில் முதலாந்தவணைப் பரீட்சை விடுமுறை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பம்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

sri_lanka_school_c150511[1]கொழும்பு: தமிழ் சிங்கள அரசாங்கப் பாடசாலைகளில் முதலாந்தவணைப் பரீட்சை விடுமுறை எதிர்வரும் 05ம் திகதி வியாழக்கிழமை கொடுக்கப்பட்டு மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சகல முஸ்லிம் பாடசாலைகளும் ஏப்ரல் 09ம் திகதி கொடுக்கப்பட்டு மீண்டும் 17ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13, 14ம் திகதிகளில் தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் உள்ளிட்ட சகல அரசாங்க காரியாலயங்களுக்கு அரசு விடுமுறை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment