குறுகிய காலத்தில் மட்டு காத்தான்குடியில் 70க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அண்மைக்காலமாக இறந்து வருவதனால் அது தொடர்பாக பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விப்புணர்வூட்டும் சுட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பஸ் டிப்போ அருகாமையிலுள்ள செஞ்சிலுவைச்சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி எஸ்.எம்.ஐ.எல்.சாகலசூரிய,கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோவேந்திரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.முபாஸிர்,100க்கும் மேற்பட்ட ஆண் பெண் பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடையகள் இறக்காமலிருப்பதற்கு தேவையான மருந்து வகைகளை கொள்வனவு செய்து அதை எவ்வாறு பாவிப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பண்ணையாளர்கள் பண்ணை விபரங்களும் சேகரிக்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோவேந்திரன் கடந்த மூன்று மாதங்களில் குறிப்பாக மழைகாலங்களில் மாத்திரம் 60 க்கும் மேற்பட்ட ஆடுகள்,10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

தொடர்ந்து காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை நிலவி நிறைய கால்நடைகள் இறந்து போயுள்ளன.

இதற்கான நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் மக்களுக்கு  பூரண தெளிவு கிடைக்க வேண்டும் எனன்பதற்காகவே இந்த விழிப்புணர்வுக் கூட்டம் ஏற்பாட்டு செய்யப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment