இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அவர்களை புன்படுத்தும்: சமித்த தேரர்

DSC_4398– இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: இன்று உலகலாவிய ரீதியில் 1200 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துர செயற்பாடுகள் அவர்களையும் புன்படுத்தும் என்பதை எடுத்துரைத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர், இலங்கை திருநாட்டில் 1971, 88,89 ஆண்டுகாலப்பகுதிலும், அதனை தெடர்ந்து ஏற்பட்ட இரத்த குளிப்பினையும்,  மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்று கடம் தொனியில் தெரிவித்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று(2013.04.02) காலை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில் –

இன்று பொது பலசேனா கூறுவது போன்று அமைச்சர் ஹக்கீமே மற்றும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களோ இல்லையென்றால்இஜனறாயத்தை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க அல்கைதாவையோ, இடிப்படைவாதிகளையா அழைக்க வேண்டுகின்றார்கள்.

DSC_4398
WWW.YOURKATTANKUDY.COM

பௌத்த மதம் என்பது மனித நேயத்தை விரும்பும்இஏனைய மத்த்தவர்களுடன் மிகவும் நெருக்கமாக உறவை பேனுமாறே கூறுகின்றது.இன்று தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு காரணம்இசந்தேகம், இந்த சந்தேகம் என்பது கொடிய விஷமாகும், இந்த விஷத்தை களையாத வரை ஒரு போதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.

இன்று யுத்தமற்ற  ஒரு சமாதான சூழலில் நாம் வாழந்து கொண்டிருக்கின்றோம்.அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது சகலரதும் பொறுப்பாகும்.அதனை விடுத்து குரோத்த்தை விதைத்து அதிலிருந்து நல்லதை அறுவடை செய்ய முடியாது, அந்த அறுவடையானது கலவரத்தையே தோற்றுவிக்கும் என்பதை எச்சரிக்கை செய்கின்றேன்.இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்த்து, எமது மக்களுக்கிடையில் காணப்படும் உறவினை சீர்குலைக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

DSC_4412
WWW.YOURKATTANKUDY.COM

இங்கு கருத்துரைத்த அருட் தந்தை சக்திவேல் அவர்கள்-

நாம் இன்னும் சில தினங்களில் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட இருக்கின்றோம்.அப்படியென்றால் நாம் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களும் வாழ்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவ்வாறெனில் அவர்களது உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தானே யதார்த்தம்.ஆனால் அதற்கு மாறாக இந்த நாடு தனியொரு சமூகத்திற்கு மட்டும் சார்ந்த்து என்று கூறுவது பொருத்தமற்றது தானே.

முஸ்லிம்கள் அவர்களது விடயங்களில் ஹலால் இஹராம் பேனுவது  அது மதக் கடைமையாகும்.ஹலால் என்றால் நல்லது, ஹராம் என்றால் கூடாது, இன்று சிலர் அந்த ஹராத்தை செய்கின்றார்கள்.ஹராத்தை இல்லாமல் ஆக்க வேண்டும். அல்ல நல்லதாகும்.அரசாங்கத்துக்குள் சிலர் இருந்து கொண்டு சிலர் ஹராத்தை ஊக்குவிக்கின்றார்கள். இவர்கள் யாரென்பது குறித்து ஜனாதிபதிக்கு நன்னு தெரியும்.அவர்களை தமது ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.இதே போல் தான் 18வது திருத்தச் சட்டமும்  ஹராமாகும்.

DSC_4419
WWW.YOURKATTANKUDY.COM

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும் .அதில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் செயலுக்கு வர வேண்டும் அப்போது தான், வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டுக்குள் முகம் புதைக்காது. இல்லாதவிடத்து தொடர்ந்தும் நாம் சர்வதேசத்துக்கும் ஏனையவர்களுக்கும் பொய்யினையே கூறிக் கொண்டுவருவோம்.

பொதபலசேனா இன்று கடும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.இது வரைக்கும் 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்டதிலிருந்து அண்மைய பொதுபல சேனாவினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ள மத தளங்கள் மற்றும் ஏனைய  சொத்தழிவுகளின் எண்ணிக்கை 65 ஆகவுள்ளது.இதனை இனியும் செயற்பட சட்டம் இடம் கொடுக்க்க் கூடாது என்றும் கூறினார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மௌலவி பருன், அருட தந்தை பேராசிரியர் கிறிஸ்மன் லியோ, மணி ஸ்ரீனிவாச குருக்கல், டி.கே.அசூர் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

Published by

Leave a comment