வாயில்லா ஜீவன்கள்..

ELECTION– முஜா

காவியுடை பயங்கரவாதத்தால்
காக்கிச்சட்டையும் கழன்றுவிட்டது
புழக்கடை சமாச்சாரங்களால்
கண்கட்டப்பட்ட எமது தலைவர்கள்
சாக்கடை அரசியலுக்குள்-இன்று
அதிகாரத்தால் அமிழ்த்தப்பட்டிருக்கின்றனர்.

☪ ☪ ☪ ☪ ☪ ☪

போராட தோன்றியபோது….
போராட்டம் எதற்கு?
நாங்கள்தானே உங்கள் தலைவர்கள்!
போராளிகளே…! உரிமையை வெல்ல
போராடுங்கள் என்றீர்கள் தேர்தல் களத்தில்…

☪ ☪ ☪ ☪ ☪ ☪

உங்கள் போலி வேசங்கள் அறியப்பட்டு
உங்களை காணும் போதெல்லாம்
உமிழ்நீர் சுரந்த எங்கள் முகங்களைக் கண்டதும்
பதறியடித்து பொறுமை என்றீர்கள்!
மீண்டும்…
மார்க்கம் என்றீர்கள்!
மறுமையையும் நினைவுபடுத்தினீர்கள்!!

☪ ☪ ☪ ☪ ☪ ☪

ஏமாந்தோம்….
உரிமையையாவது வென்று தரட்டுமே
என்று குடும்பத்தை துறந்து
உற்ற நண்பணை இழந்து வாக்களித்தோம்
வெறுங்காகித வாக்குகளல்ல – அவை
நீங்கள் மஹ்ஸரை ஞாபகப்படுத்தி
எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் !

☪ ☪ ☪ ☪ ☪ ☪

தேர்தல் மேடைகளில்
முஸ்லீம் சகோதரன் என்றும் பாராமல்
எதிர்த்தரப்பைக்  கிழி கிழித்தீர்களே!
வீர வசனங்களும்,
உணர்வளைகளும் வானைப் பிளந்தன!

☪ ☪ ☪ ☪ ☪ ☪

எம் சமூகத்தின் விடிவெள்ளிகள்
குரல்வளைகள் பிடிங்கப்பட்ட நிலையில்
தேவையில்லா மேடைகளில்- இன்று
சமூசா கடித்து தேநீர் அருந்துகின்றனர்.

☪ ☪ ☪ ☪ ☪ ☪

பாவம் வாயில்லா ஜீவன்கள் அவர்கள்
விட்டு விடுங்கள்.. அல்லாஹ்வுக்காய்
தேர்தலில்…விட்டு விடாதீர்கள்…!!!

Published by

Leave a comment