லொறி சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் பலி-ஆரையம்பதியில் சம்பவம்

accident-sign– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அகிலேசன் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்;.

குறித்த சிறுவனின் வீட்டில் நேற்றிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திறப்பு இருந்த நிலையில் மற்றுமொரு சிறுவன்(சகோதரன்) ஒருவன் லொறியை இயக்கி லொறியை செலுத்த முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment