– லொறி சில்லில் சிக்குண்டு உயிரிழந்த 04வயது சிறுவன் தொடர்பில் ஒருவர் கைது-மற்றவர் பிணையில் விடுதலை

accident-sign– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று இரவு லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த 04வயது சிறுவனின் மரணம் தொடர்பில் மற்றொருவரை கைது செய்து விசாரணை நடத்துமாறு காத்தான்குடிப் பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சம்பவத்தில் சாரதியின் கவனயீனத்தால் வாகன சாவியை 16வயது நிரம்பிய சிறுவனிடம் ஒப்படைத்து வாகனத்தை கழுவுமாறு சாரதி வேண்டியதற்கிணங்க அச்சிறுவன் வாகனத்தை கழுவிவிட்டு இயக்கிய போது வாகனம் முன்சென்று ஆரையம்பதி காட்டுமாவடி வீதியில் வசிக்கும் அப்பாவி 04வயதுக் குழந்தையின் உயிரை பறித்தெடுத்தது.

ஏலவே கைது செய்யப்பட்ட சிறுவனை 1 இலட்சம் ரூபா பிணையில் விட்ட நீதிபதி 23ம் திகதி வரை வழக்கு விசாரணைத் திகதியை ஆக்கியதுடன் வாகனத்தின் திறப்பை கவனயீனமாக வாகனத் திறப்பை சிறுவனின் கையில் கொடுத்த வாகன உரிமையாளரைகைது செய்து விசாரணைக்க உட்படுத்துமாரு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் காத்தான்குடிப் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவத்தில் ஆரையம்பதி காட்டுமாவடி வீதியில் வசிக்கும் அகிலேஸ்வரன் அக்ஷனன் என்ற 04வயது சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment