மூதூர்: காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை முதூர் ஷாபி நகரிலுள்ள றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிதியினை கையளிக்கும் வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய சமாதான ஒன்றியத்தின் தலைவருமான மௌலவி ஏ.எம்.அப்துல் காதர், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா அதன் பொருளாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் றஹ்மான், அதன் உப தலைவர் ஏ.எம்.சாதிக்கீன், நிருவாக செயலாளர் எம்.ஏ.சி.எம். ஜெலீஸ், உப செயலாளர் எம்.எம். டீன்பைறூஸ், மூதூர் பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் மௌலவி எம்.தஸ்ரக் நத்வீ, மூதூர் ஹோம் பீஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.முறாசில், மூதூர் முக்கியஸ்த்தர் ஏ.எம்.ஜிஹாத் ஆசிரியர், ஏ.முஜீப் உட்பட முக்கியஸ்த்தர்கள் றிஸானாவின் தந்தை நபிக் உட்பட குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து செலவு தவிர்ந்த ஏனைய நிதியான ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் இதன் போது றிசானாவின் தந்தையான நபீக்கிடம் கையளிக்கப்பட்டது. அத்தோடு 50 நூல்களும் இதன் போது றிசானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.
இந்த வைபவத்தில் காத்தான்குடி மீடியா போரம் இந்த நூலையும் இறுவட்டையும் வெளியிட்ட மைக்காக காத்தான்குடி மீடியா போரத்தின் இந்த பணியினை பாராட்டி மூதூர் ஹோம்பீஸ் நிறுவனத்தினால் பாராட்டு பத்திரமொன்றும் காத்தான்குடி மீடியா போரத்திற்கு வழங்கப்பட்டது இந்த பாராட்டு பத்திரத்தை அதன் தலைவர் எம்.அமீர் வழங்கி வைத்தார்.
இங்கு சென்ற காத்தான்குடி மீடிhய போரத்தின் பிரதி நிதிகளையும், காத்தான்குடி முக்கியஸ்த்தர்களையும் றிசானாவின் பெற்றோர் மற்றும் மூதூர் முக்கிஸ்த்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன் இந்த பணியில் ஈடுபட்ட காத்தான்குடி மீடியா போர பிரதி நிதிகளையும் பாராட்டினர்.
வறுமையின் பெயரால் ஷஹீதான றிசானாவுக்காக இந்த பணியினை மேற் கொள்ள முன் வந்தமைக்காக றிசாவின் பெற்றோர் காத்தான்குடி மீடியா போரத்திற்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதியன்று சஊதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றில் மூதூர் றிஸானாவுக்கு சஊதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று முதல் இலங்கையின் பலவேறு ஊடகங்களில் றிஸானா தொடர்பில் வெளியான கட்டுரைகள் ஆக்கங்களை உள்ளடக்கி காத்தான்குடி மீடியா போரம் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி றிசானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டு ஆகியவற்றை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் வைத்து வெளியிட்டதுடன் கொழும்பில் கடந்த 22ம் திகதி அதன் அறிமுக வைபவமொன்றையும் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் கிடைக்கும் நிதியினை றிசானாவின் பெற்றோரிடம் வழங்குவதென காத்தான்குடி மீடியா போரம் அறிவித்திருந்ததுடன் அவர்களின் குடும்பத்திற்கும் கூறியிருந்தது அந்த வகையிலேயே இந்த நிதி கையளிக்கப்பட்டது.
இந்த நூல் மற்றும் இறுவட்டு தொடர்பான கணக்கறிக்கையும் காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்படவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்த்தபா தெரிவித்தார்.

Leave a comment