இல்மி அஹமட் லெப்வை அவர்களின் உரையின் ஒலி வடிவம் இணைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக நலிவுற்ற மக்களுக்கு பல்வேறுபட்ட நற்பணிகளை முன்னெடுத்து வரும் காத்தான்குடி (ஓ.எஸ்.ஏ.) சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு புதிய காத்தான்குடி தெற்கு பிரதேசத்தில் வறிய மக்கள் மற்றும் விதவைகளுக்கான குழாய்க் குடி நீர் இணைப்பு இலவசமாக பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வும் இளம் விதவைகளுக்கு சுய தொழிலுக்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி பிரதேச காரியாலயத்தில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெப்வை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது வறிய மக்கள் மற்றும் விதவைகளுக்கான குழாய்க் குடி நீர் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டதுடன் இளம் விதவைகளுக்கு சுய தொழிலுக்கான காசோலையும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெப்வையினால உரியவர்களிட்ம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் பொருளாளர் தாஹிர் ஜேபி, அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி மஸ்ஊத் அஹமட் காஸிமி,உப செயலாளர் மௌலவி பௌசுல் அமீன் (ஜமாலி), உப தலைவர் நஸார் மற்றும் பள்ளிவாயல் தலைவர்கள், உலமாக்கள்,பாடசாலைகளின் ஆசிரியர்கள், பிரதேச அகிராம உத்தியோகத்தர் றவூப் ஜி.எஸ். மற்றும் ஊர் பிரமுகர்கள் நலன் விரும்பிகள், (ஓ.எஸ்.ஏ.) சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
(ஓ.எஸ்.ஏ.)அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்வை அவர்களின் உரையின் ஒலி வடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Leave a comment