
பழுளுல்லாஹ் பர்ஹான்
தம்பிலுவில்: மஹிந்த சிந்தனையின் ஊடாகவும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா அவர்கள் தந்த அரசியல் அதிகாரத்தினாலும் பின்தங்கி வாழ்கின்ற பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அபிவிருத்தி செய்ததன் மூலம் மூவின மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளோம் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் அதிகாரத்திற்குட்பட்ட சாகாம பிரதேச நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தன் கீழ் கிழக்கு மாகாண வீதி அ
பிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் 22 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 1.25 கிலோ மீற்றர் வீதியும் சாகாம பாவங்காய் அனைக்கட்டு அபிவிருத்தி ஆரம்ப விழா தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜீ. சுஜிதரன் தலைமையில் இடம்பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் அணைக்கட்டும், வீதியும் அபிவிருத்தி செய்யப்படுவதனால் சுமார் 1000 ஏக்கர் விவசாயக் காணியும், விவசாயிகளும் நன்மை அடைவர்.
இந் நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லா அவர்களிக் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவூத், நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் யூ. எல். ஏ. நசார் உட்பட அமைச்சரின் செயலாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Leave a comment