தாறுல் அதரின் சமூக சேவைப்பிரிவினரால் சிரமதான நிகழ்வு

???????????????????????????????
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி:  காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின்  சமூக சேவைப்பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை 06.00 மணியளவில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் செய்யப்பட்டது.

இன்று காலை 06.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சிரமதான வைபவத்தில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, தாறுல் அதர் பிரச்சாரகர் மௌலவி அஸ்பர் (பலாஹி), காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அறபு மொழி விரிவுரையாளர் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி), காத்தான்குடி செஞ்சிலுவைச்சங்க கிளைத் தலைவர் அப்துல்லாஹ், காத்தான்குடி தாறுல் அதர் சகோதரர்கள், சூறாசபை உறுப்பினர்கள், பொருமளவிலான சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சிரமதானத்தில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் மையவாடியின் ஒரு பகுதி துப்பரவு செய்யப்பட்டதுடன் அடுத்த பகுதி வருகின்ற கிழமைகளில் துப்பரவு செய்யப்படவுள்ளதாகவும் தாறுல் அதர் சமூக சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு சமூகத்தில் மக்களை ஆண்மீக ரீதியில் நல்வழிப்படுத்துவது மாத்திரமில்லாமல் பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment