கொழும்பு: கொழும்பு தேசிய நூதனசாலை காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக தேசிய மரபுகள் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் நூதனசாலையின் படி இடிந்து வீழ்ந்ததால் அதனைப் பார்வையிடச் சென்ற 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக தேசிய மரபுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
படி மீள்நிர்மாணம் செய்யப்படும்வரை நூதனசாலை மூடப்படும் எனவும் நூதனசாலை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment